×

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, ரூ.12.50 அதிகரிப்பு: வாடிக்கையாளர்கள் ஷாக்!

சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, ரூ.12.50 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை,அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.

இதனால், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை, வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு, ரூ.1,100க்கு மேல் விற்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.200 குறைத்தது. இதனால், டெல்லியில் ரூ.903, மும்பையில் ரூ.902.50, கொல்கத்தாவில் ரூ.929, சென்னையில் ரூ.918.50 ஆக குறைந்தது. தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நிலையாக வைத்துக்கொண்டனர். நடப்பு ஆண்டின் முதல் மாதமான ஜனவரியிலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில் இந்த மாதமும் (பிப்ரவரி) வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.918.50 என்ற அளவிலேயே தொடர்கிறது. அதே நேரம் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.12.50 அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,937ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, ரூ.12.50 அதிகரிப்பு: வாடிக்கையாளர்கள் ஷாக்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Federation of Oil Companies ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...